என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட்
நீங்கள் தேடியது "ஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட்"
ஹோன்டா நிறுவனத்தின் சிவிக் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம். வெளிப்புற மாற்றங்களுடன் வெளியாகியிருக்கும் காரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honda
ஹோன்டா நிறுவனத்தின் சிவிக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபேஸ்லிஃப்ட் கார் வெளிப்புற மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சிவிக் 2019-ம் ஆண்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் புதிய சி.ஆர்.வி. மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது.
பத்தாவது தலைமுறை சிவிக் மாடல் தற்போதைய மாடலை விட அதிக ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. முன்பக்கம் புதிய கிரில் பியானோ பிளாக், எல்.இ.டி. ஹெட்லைட்கள் புதிய எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், முன்பக்க ஃபாக் லேம்ப்களில் க்ரோம் அக்சென்ட்கள், ஆங்குலர் பம்ப்பர் உள்ளிட்டவை காரின் முன்பக்க தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது.
பக்கவாட்டில் ஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட் ஷோல்டர் லைன் ஹெட்லைட்டில் இருந்து டெயில் லைட்களுக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் காரில் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்களை கொண்டுள்ளது. பின்புறம் ஹோன்டா சிவிக் பின்புற பம்ப்பரின் கீழ் க்ரோம் அக்சென்ட் கொண்டுள்ளது.
உள்புறத்தில் ஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மேம்படுத்தப்பட்ட 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, வயர்லெஸ் சார்ஜிங், சன்ரூஃப், பின்புற ஏ.சி. வென்ட்கள், முன்புறம் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஆறு ஏர்பேக்ஸ், ஏ.பி.எஸ், இ.பி.டி., அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், கொலிஷன் வார்னிங் மற்றும் மிடிகேஷன் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேடிக் பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.0 லிட்டர் i-VTEC பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 154 பி.ஹெச்.பி. பவர், 189 என்.எம். டார்கியூ மற்றும் டீசல் இன்ஜின் 118 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 300 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு CVT கியர்பாக்ஸ் வழங்குகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X